செயலிழந்த பேட்டரிக்கு ஒரே நாளில் புதிய பேட்டரி பெற்ற அனுபவம்
🔵மிக எளிதாக ஏமாற்றப்படும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள்
நண்பர்களே சமீபத்தில் 9 மாதங்களுக்கு முன்பாக இரண்டு சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்கி இருந்தேன். ஆனால் சரியாக 9 மாதத்தில் சுத்தமாக பேட்டரி செயல்பட வில்லை. நான் தொடர்ந்து எனது டூவீலரை ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கிடம் சரிபார்த்து கொடுக்குமாறு கேட்டேன். எனக்கு மெக்கானிக் தானே பொறுப்பு எடுத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட கம்பெனி நன்றாக இருக்கும் என்று அந்த பேட்டரியை வாங்கி அவரே மாற்றி கொடுத்து இருந்தார். அன்னாரிடம் சென்று கேட்டபோது முன்பு நன்றாக இருந்த டிஸ்ட்ரிபியூட்டர், தற்பொழுது சரியான முறையில் பேட்டரியை மீண்டும் தருவதில்லை. ரீப்ளேஸ் செய்து தருவதில்லை என்று கூறினார். குறைந்தது 25 நாட்களுக்கு மேல் ஆகிறது பேட்டரி மாற்றித் தருவதற்கு என்றும் தெரிவித்தார். நான் கேட்டேன் 25 நாட்கள் பேட்டரி இல்லை என்றால் ஸ்டேண்ட் பை பேட்டரி கொடுப்பீர்களா என்று கேட்டேன். அதுவும் அந்த கடைக்காரர் தர மாட்டேன் என்கிறார். முதலில் உங்களது பேட்டரியை செக் செய்வோம். பிறகு அதைப் பற்றி பேசிக் கொள்வோம் என்று கூறினார். நானும் முதல் நாள் மாலை அவரிடம் பேட்டரியை கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாள் மாலை சென்று கேட்டபோது பேட்டரி வேலை செய்யவில்லை என்று தெரிவித்தார். அவரே டிஸ்ட்ரிபியூட்டர் இன் கடையும் எனக்கு சொல்லி அனுப்பி அனுப்பினார்.
மாலையில் அந்த டிஸ்ட்ரிபியூட்டர் சென்று சந்தித்தேன். அவர் 15 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் தெரிவித்தா.ர் 15 நாட்களுக்கு மேல் ஆகும் என்றால் எனக்கு ஸ்டாண்ட் பை பேட்டரி கொடுங்கள் என்று கேட்டேன் . அதற்கு அவரோ கமிஷனை மெக்கானிக் வாங்கி சென்று விட்டார் . எனவே கமிஷன் பெற்றுக் கொண்ட மெக்கானிக் தான் தங்களுக்கு ஸ்டாண்ட் பை பேட்டரி கொடுக்க வேண்டும் . நான் கமிஷன் எடுத்திருந்தால் உங்களுக்கு ஸ்டன்பேப் பேட்டரி தரலாம் என்று கூறினார் .நான் விடவில்லை. எனக்கு ஸ்டாண்ட் பை பேட்டரி வேண்டும் அல்லது நாளையே இந்த பேட்டரி சரிசெய்து அல்லது ரிப்லெஸ் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து மீண்டும் மீண்டும் பலமுறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன் .அவரோ கோவமாக மெக்கானிக்கு போன் செய்தார். மெக்கானிக் எனக்கு லைனில் வந்து, சார் உங்களை கேட்கத்தான் சொன்னேன். ஆனால் நீங்கள் அதை அழுத்தி என்று கேட்பது தவறு என்று தெரிவித்தார்., நானும் இல்லை இல்லை. இது எனது உரிமை, எனது வண்டிக்காண பேட்டரி, பணம் நான் கொடுத்துள்ளேன். எனவே நான் தான் கேட்க வேண்டும் என்று கூறினேன்.
அதன் தொடர்ச்சியாக டிஸ்ட்ரிபியூட்டர் என்னிடம் நாளை மாலைக்குள் தங்களுக்கு பேட்டரியை நான் சரி செய்து தருகிறேன் . எனது கடையில் மீண்டும் செக் செய்ய வேண்டும்,அப்பொழுதுதான் அதற்கான முடிவு தெரியும் என்று தெரிவித்தார். ஏன் மெக்கானிக் இன்றே அதனை உங்கள் கடையில் கொடுத்திருக்கலாமே, நீங்கள் இன்றே முடிவு செய்திருக்கலாம் என்று கேட்டேன். அது எனக்கு தெரியாது. நீங்கள் மெக்கானிக்கை கேளுங்கள் என்று கூறிவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்தபிறகு மெக்கானிக் எனக்கு போன் செய்தார். மெக்கானிக்கிடம் பேசினேன். மெக்கானிக் என்னடியாம் பேசும்போது , நீங்க டிஸ்ட்ரிபியூட்டர் வசம் எப்படிக் கூறினாலும் நாளை மாலை புது பேட்டரி தரமாட்டார். பத்து நாட்கள் கழித்து தான் உங்களுக்கு தருவார் என்று தெரிவித்தார். மீண்டும் கடைக்காரருக்கு போன் செய்தேன் .அவரோ ஸ்டாக் இருந்தால் நாளை மாலை நான் தருவேன். ஸ்டார்க் இல்லை என்றால் இரண்டு நாட்கள் ஆகும் என்று மீண்டும் தெரிவித்தார்.
இதெல்லாம் சரியாக வராது என்று முடிவு செய்து நேரடியாக ஆன்லைனில் அமர்ந்து குறிப்பிட்ட பேட்டரி கம்பெனியின் சென்னை நம்பரை எடுத்துப் பேசினேன். அங்கு உள்ளவர் கோயமுத்தூரில் மண்டல அலுவலக மேலாளர் நம்பரைக் கொடுத்தார். மண்டல மேலாளர் இடம் பேசினேன். அவர் உடனடியாக மதுரை மேலாளரின் நம்பரை கொடுத்து அவரையே என்னிடம் பேசவும் வைத்தார். உள்ள நிலைமை அவருக்கு தெளிவாக எடுத்துக் கூறினேன். அவர்களோ நாளை செக் செய்துவிட்டு உங்களுக்கு உடனடியாக பேட்டரி மாற்றித் தரப்படும் என்று தெரிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாக மறுநாள் 11:30 மணி அளவில் உங்களது பேட்டரி முற்றிலுமாக செயல் இழந்து விட்டது. புதிய பேட்டரியை ரீப்ளேஸ் செய்து தருகிறோம். உடனடியாக வண்டியை எடுத்து வாருங்கள் மாற்றித் தருகிறோம், என்று டிஸ்ட்ரிபியூட்டர் என்னிடம் தெரிவித்தார். ஒரு மணிக்கெல்லாம் சென்று எனது வண்டியை கொடுத்து புதிய பேட்டரியையும் மாற்றிக் கொண்டு வந்து விட்டேன்.
நண்பர்களே மிக எளிதாக நம்மை ஏமாற்றுவதற்கு மெக்கானிக்கும், கடைக்காரரும் சேர்ந்து திட்டமிட்டு முயற்சி செய்தார்கள். ஆனால் மண்டல அலுவலகம் அல்லது அவர்களது மதுரை அலுவலகமோ கஸ்டமருக்கு வேண்டிய உதவியை செய்வதற்கு தயாராக இருந்தார்கள். அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் உடனடியாக எனக்கு பேட்டரி மாற்றி தரப்பட்டது .மிகவும் சிறப்பான விஷயமாகும். எனவே இனிவரும் காலங்களில் பேட்டரி மாற்றுவதற்கு 20 நாள் 25 நாள் என்று யாரேனும் உங்களிடம் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள் .உடனடியாக மண்டல மேலாளர் அல்லது உயர் அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான வழிகாட்டுதல் சரியான முறையில் சரியான நேரத்தில் சொல்லப்படும் என்பது உறுதி .
இந்நிகழ்வில் தொடர்ந்து எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் மெக்கானிக் சொல்வதையே கேட்டிருந்தால் அது சரியான தகவலாக போயிருக்காது. அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டு அந்த 20 நாள் எந்த விதமான பேட்டரியும் இல்லாமல் , நாம் தொடர்ந்து புதிய பேட்டரியை வாங்குவதற்கான சூழ நிலைக்கு தள்ளப்படுவோம் என்பது உண்மையாகும். இது மாதிரி தருணங்களில் தாங்கள் சமயோஜிதமாக முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
எம்.எஸ்.லெட்சுமணன் ,
காரைக்குடி.
Comments
Post a Comment