தன்னம்பிக்கை காலைப் பொழுது பொன்மொழிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.ஓடிக் கொண்டு இருக்கும் ஆறு,
தன் பயணத்தில் இருந்து திரும்பி வருவதில்லை...
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு,
மீண்டும் வில்லிடம்
திரும்பி வரப்போவதில்லை..
கல்லில் உருவான தெய்வம்,
கல்லாக மாறப் போவதில்லை....
உன் சொல்லில்,
உன் செயலில்,
மாற்றம் இல்லாமல்
நீயும் செயல்பட்டுக் கொண்டே இரு....
👏👏👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம்!
👏👏👏👏👏👏👏👏👏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2.👏👏👏👏👏👏👏👏
உறவுகளை சரியாகப் பேணி உறவாடுவதும் ஓர் கலையே...!!
பிரச்சினைகள் அற்ற உறவுகளும் இல்லை...!!
இணங்க மறுக்கும் உறவுகளும் இல்லை...!!
விட்டுக் கொடுத்து செல்பவர்கள் முட்டாள்களும் அல்ல...!!
அடங்கிச் செல்பவர்கள்
அடிமைகளும் இல்லை...!!
உணர்ந்துக் கொண்டால்
அனைத்தும் நலமே...!!
👏👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம்.!
👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்.💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3.👏👏👏👏👏👏👏👏👏
குறை ஒன்றுமில்லை!
குறை ஒன்றுமில்லை!!
என்று சொன்னால் மட்டும் நிறைவாகுமா?..
இருக்கின்ற குறைகளை,
வருகின்ற குறைகளை,
குறைக்க பழக வேண்டும்..
பிறை போல வளரும் குறைகளை,
ஆரம்பத்திலேயே
சிறைப்படுத்த வேண்டும்..
குறைகளோடு பயணிக்காமல்,
நிறைவாக்க முயற்ச்சி!...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4.👏👏👏👏👏👏👏👏👏
பேனாவின் முனையில் இருந்தா கதைகள் பிறக்கின்றன?
எழுத்தாளரின் எண்ணத்தில் இருந்து வந்ததால் தான் கதைகள் பிறக்கின்றன..
உதட்டின் அளவில் பேசுபவை எல்லாம் உண்மையாகுமா ?
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருபவை தான்,
உண்மையாக இருக்கும்...
*உண்மையோடு செயல்படு!*
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5.👏👏👏👏👏👏👏👏👏
ஒரு கையை வைத்துக் கொண்டு,
கரவொலி எழுப்ப முடியுமா?
ஒரு பக்கம் ராஜா மட்டுமே இருந்தால்,
நாணயம் செல்லுமா ?
இரு கைகள் இணைத்தால் தான்,
உற்சாகம் பிறக்கும்...
மறுபக்கத்தில் பூவும் இருந்தால் தான்,
நாணயத்திற்க்கு மதிப்பு இருக்கும்...
வாழ்க்கையில் ஏற்றமும்,
இறக்கமும் இருந்தால் தான்,
வாழ்க்கை புரியும்...
வாழ்க்கையை ரசித்தால்...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6.👏👏👏👏👏👏👏👏
திறமை என்பது பிறப்பிலேயே கொடுக்கப்பட்டது,
ஊமையாக இருந்து வீணாக்காதே....
புகழ் என்பது வளர்ப்பில் வருவது,
அடிமையாகி விடாதே...
ஆணவம் என்பது அழிவுக்காக வருவது,
அதிக கவனத்துடன் இரு...
மனம் தூய்மையாக இருந்தால்,
செல்லும் வழியெல்லாம்....
👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7.👏👏👏👏👏👏👏👏👏
குப்பைகளை சேர்க்கும்
இடம் மட்டும் தானே குப்பைத் தொட்டி...
கவலைகளை சேர்க்கும் இடத்திற்க்கு பெயர் என்ன?
நிலைகளை யாராலும் மாற்ற முடியாது...
கவலைகளை காற்றில் விடு....
தவறென தெரிந்தும்
தவறை செய்வோமா ?
பிழைகளை திருத்திக் கொள்..
விலை மதிப்பில்லா வாழ்க்கையில்...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
8.👏👏👏👏👏👏👏👏👏
கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உடனே தணிக்க முடியுமா?
நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் சாம்பலாக்கி விடும்...
விளக்கில் எரியும்
நெருப்போ,
மாபெரும் வெளிச்சத்தை தரும்...
கொடூரமான கோபத்தால், எல்லாவற்றையும் இழக்கக் தான் நேரிடும்...
கொட்டும் பனி போன்ற அன்பினால்,
எதையும் சாதிக்கலாம்...
*கோபத்தை தவிருங்கள்!*
விளக்கொளியாய் ஒளிருங்கள்!...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
9.மனம் ஒரு குடை போன்றது
அது திறந்திருந்தால் மட்டுமே பயனுள்ளதாக அமையும்....
*இனிய காலை வணக்கம்*💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
10.👏👏👏👏👏👏👏👏👏
குளத்தில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து தான்,
தாமரையின் தலை உயரும்...
வானத்தில் இருக்கும்
மேகத்தின் அளவைப் பொறுத்து தான்,
மழைப் பொழிவு இருக்கும்...
உள்ளத்தில் இருக்கும்
எண்ணங்களைப் பொறுத்து தான்,
உன் வாழ்வில் வழி இருக்கும்....
*இலக்கில் எண்ணம் இருந்தால், எதுவும் சாத்தியமே!*
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
11. பொறுமையாக இருங்கள் உங்களுக்காக எழுதப்பட்டவை "உங்களை வந்து சேர்ந்தே தீரும்..! ஏனென்றால் அதை எழுதியவன் மிகச் சிறந்த எழுத்தாளன் இறைவன் ஆகும்.
இனிய காலை வணக்கம்.💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
12.👏👏👏👏👏👏👏👏👏
விழுந்த பொழுதெல்லாம்,
அழுது கொண்டே எழுந்து வரும் குழந்தை...
வீழ்ந்து விட மாட்டோம் என்பது ஆரம்பத்திலே தெரிகிறது....
தாழ்ந்து போகாதே யாரிடமும்...
அகந்தை கொள்ளாதே
எவரிடமும்...
அடித்தவரை அரவணைத்து கொள்..
அவரை கொல்ல நினைக்காதே...
வந்ததை எண்ணிக் கவலை கொள்ளாதே..
வருவதை எண்ணிப் பயணப்படு...
இழந்தது எதுவும் இல்லை...
*குழந்தை மனமோடு நீ இருந்தால்....*
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
13. 👏👏👏👏👏👏👏👏இன்றைய உழைப்பின் வலி...
நாளைய வாழ்க்கையின் ஒளி !
ஊன்றுகோலாய் இருப்பதை விட,
தூண்டுகோலாய் இருங்கள் .
அதுவே சிறந்த வழிகாட்டுதலாய் இருக்கும் !
👏👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம்.!
👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான இனிய காலை வணக்கம்.💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
14.*உன்னை நீ*
*நம்பத்*
*தொடங்கிவிட்டால்*..
*நீ உலகில்*
*வெற்றியுடன்*
*வாழக் கற்றுக்*
*கொண்டு விட்டாய்*
*என்று பொருள்*
*இனிய காலை வணக்கம்..*💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
15.👏👏👏👏👏👏👏👏எதுவும் நிலையில்லாத இப்பிரபஞ்சத்தில் உங்கள் கவலைகளும் கூட நிரந்தரமில்லை. காலத்தோடு கரைந்து போகும் கவலைகளை நினைத்து விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்காதீர்கள்.
கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் ஓடும் காலத்தை நிறுத்த முடியாது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எவ்வளவு கவலைப்பட்டாலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது. நடந்து முடிந்ததை நினைக்காமல் நடக்கப் போவதை பாருங்கள்.
ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்வின் 'இன்று' என்ற பொக்கிஷம் இப்போது உங்கள் கைகளில் உள்ளது வாழ்ந்து தீர்த்து விடுங்கள்*
👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்.
👏👏👏👏👏👏👏👏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
16.நம்மைப்
படைத்தவனுக்குத் தெரியும்,
நம்மால் எவ்வளவு சுமையினை
சுமக்க முடியும் என்று.
நம்பிக்கையுடன் வலம் வருவோம்.
எதுவும் கடந்து போகும்.
இனிய காலை வணக்கம்.💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
17.👏👏👏👏👏👏👏👏👏
மலையேறும் சுமை தாங்கிகளுக்கு,
முட்டுக்கட்டைகள் தான் முன்னேற்றப் பாதையை தருகின்றன....
சிலையாகும் கல்லும்,
உளியின் காயங்களால் தான் உருவாகின்றன...
விலை மதிப்பில்லாத
மானிட பிறப்பிலே,
தடைக்கற்களை கண்டு தயங்காதே...
தடைக் கல்லை உடைத்து,
உன் பயணத்திற்க்கு பாதையாக்கினால்....
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
18.👏👏👏👏👏👏👏👏👏
பிறக்கின்ற குழந்தைகள் எல்லாம்,
சிறக்க தானே வேண்டும்...
விதைக்கின்ற விதைகள் எல்லாம்,
முளைக்கத் தானே வேண்டும்...
பறக்க இருக்கின்ற விமானத்தின்,
சக்கரங்கள் இயங்கத் தானே வேண்டும்...
*எல்லாம் வேண்டும் என்றால்,*
*முயற்ச்சியும் வேண்டும்!*
முயற்ச்சிகள் செய்தால்!!
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
19 👏👏👏👏👏👏👏👏👏
ஓடிக் கொண்டு இருக்கும் ஆறு,
தன் பயணத்தில் இருந்து திரும்பி வருவதில்லை...
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு,
மீண்டும் வில்லிடம்
திரும்பி வரப்போவதில்லை..
வாயில் இருந்து உதிர்ந்த சொற்கள் திரும்ப வாயினுள் நுழையப் போவதில்லை....
உன் சொல்லில்,
உன் செயலில்,
மாற்றம் இல்லாமல்
நீயும் செயல்பட்டுக் கொண்டே இரு....
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
20
👏👏👏👏👏👏👏👏👏
கடிகாரத்துக்கு தான் தெரியும்,
காலத்தின் மதிப்பு....
கடிகாரத்தில் ஓடுகின்ற முள் இல்லை என்றால்,
கடிகாரத்துக்கு மதிப்பு இல்லை...
உனக்கு மட்டும் தான் தெரியும்,
உன் மதிப்பு...
வாழ்க்கை ஓட்டத்தில்,
கடிகார முட்களைப் போல ஓடிக் கொண்டே இரு....
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
21 👏👏👏👏👏👏👏👏👏
கதவை திறந்து வைத்தால் தானே,
காற்று வரும்...
காசைக் கொட்டினாலும்,
இயற்கை காற்றை விலைக்கு வாங்க முடியுமா?
மனதை திறந்து வைத்தால் தான்,
நினைத்ததை அடைய முடியும்...
பனித்துளி போன்ற கவலைகளை விட்டு விடு..
சூரியனின் வெப்பத்தில் பனித்துளிகள் மறையும்...
உன் உழைப்பால் கவலைகள் மாயும்...
*மனதை திறந்து வைத்தால்...!*
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
22 👏👏👏👏👏👏👏👏
மேய்ப்பன் என்பவன்
தன்னுடன் மேயும் எல்லா ஆடுகளுக்கும்,
நல்ல பாதுகாவலன் தானே....
தலைவன் என்பவன்,
தன்னுடன் வாழும்
எல்லா தொண்டருக்கும்,
நல்ல உயர்வை தருபவன் தானே....
ஆளுமை இருந்தால்
மட்டும் தலைவனாக முடியாது...
இணைத்து செல்லும்
குணம் வேண்டும்..
சொன்னதை செய்யும்
எண்ணம் வேண்டும்...
கறை இல்லாமல்,
குறைகளை களைந்தால்...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
👏👏👏👏👏👏👏👏👏
23 .நெருப்பு பந்தத்தை
தலை கீழாக பிடித்தாலும்,
நேராக பிடித்தாலும்
உயர்ந்து தான் எரியும்...
உன் பொறுப்புகளை கவலையோடு பார்ப்பதால் குறையாது...
கவலைகளால் உன் இலக்கை எட்ட முடியாது...
*முடியும்!*
விலைமதிப்பில்லாத புன்னகையோடு நீ செயல்பட்டால்....
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
********************************************
24 👏👏👏👏👏👏👏👏👏
ஊசி இடம் கொடுத்ததால் மட்டுமே,
நூல் நுழைய முடிந்தது...
ஊசியில் சிக்கும் மலர்
வலி தாங்கினால் தான்,
மலர்மாலை கிடைக்கும்...
உன் மனம் இடம் கொடுத்தால் தான்,
வெற்றிக்கு வழி கிடைக்கும்....
மனதின் சொல்,
செயலாகும்...
மனமோடு சேர்ந்த
முயற்ச்சி வெற்றி தரும்..
நல்லதை மனதில் நினைத்தால்....
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
*********************************************
25 👏👏👏👏👏👏👏👏👏
வேஷம் காட்டும் நரிகளுக்குத் தான் மதிப்பு உண்டு...
பாசம் கொட்டும் நாய்களுக்கு இல்லை..
நாசம் ஆவோம்
என தெரிந்தும்,
மோசம் போனால் என்ன பயன் ?
காசும் பணமும் அல்ல வாழ்க்கை...
வேஷத்தை தவிர்த்து வாழ்ந்து பார்,
விஷம் கூட மருந்தாகும்...
*உண்மையோடு இருந்தால்!*...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
##################################
👏👏👏👏👏👏👏👏👏
26
மாட மாளிகையில் பிறந்தவர்க்கு எல்லாம்,
மாளிகையிலேயே வாழ்ந்ததும் இல்லை....
மாட்டுக் கொட்டகையிலே பிறந்தவர்க்கு எல்லாம்,
கொட்டகையே நிரந்தரமாகவும் இல்லை...
பணத்தை வைத்து,
பிணத்தைக் கூட விலைக்கு வாங்கலாம்....
நல்ல குணத்தை வாங்க முடியாது...
*பணமல்ல வாழ்க்கை!*
நல்ல குணம் இருந்தால்,
நாம் இல்லாவிட்டாலும்....
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
**************************************
27 👏👏👏👏👏👏👏👏👏
தான் செய்யும் செயலை,
பிறர் பாராட்டினால் அவனே யோக்கியன்...
தான் செய்யும் செயலை,
தானே பெரிது படுத்துபவர் எல்லாம் அயோக்கியனே...
வாழ்ந்தாலும்,
வீழ்ந்தாலும்,
நாளை நினைவுகள் தான் சொல்லும்...
தாழ்ந்து செல்பவர் எல்லாம் கோழை அல்ல...
நினைவிலும் நிலைத்து நிற்க,
நிமிடத்தில் கூட நல்லதை செய்யுங்கள்...
ஊர் போற்றினால்...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
28
👏👏👏👏👏👏👏👏👏
பிறர் நம் மேல்
கொண்ட நம்பிக்கைக்கு,
நாம் நெம்புகோலாக இருக்க வேண்டும் ....
தன் மேல்
நம்பிக்கை வைக்கத் தான்,
தயக்கம் பலருக்கும்....
உன் மேல் கொண்ட நம்பிக்கையைக் காப்பாற்ற,
ஓடிக் கொண்டே இருப்பாய்....
மலையையும் புரட்டலாம்,
தன்னம்பிக்கை எனும் நெம்புகோல் இருந்தால்....
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
29 👏👏👏👏👏👏👏👏👏
விதைக்கப்படும் விதையானது நாளை விருட்சம் ஆகலாம்.
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு,
இலக்கை அடையலாம்...
பாதை தெரியாத,
வாழ்க்கை பயணம் கூட முடிவுக்கு வரலாம்....
நாக்கின் வழியே,
சொல்லப்பட்ட வார்த்தை மாறாது...
மறைந்தாலும் மறையாதது சொல் மட்டுமே....
*நல்லதையே சொல்லுங்கள்!*...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
30 👏👏👏👏👏👏👏👏👏
கால்களை இழந்தவர்க்கு தான்,
இழந்த கால்களின் வலிமை தெரியும்....
கண்களை இழந்தவர்க்கு தான்,
வழிகளில் வரும் வலிகள் புரியும்...
இருக்கும் வரை எதற்கும் மதிப்பு தெரியாது...
இழந்த பின் வருந்தி பயன் இல்லை.....
எதை இழந்தாலும்,
விதை போல் நம்பிக்கையோடு,
பயணித்துக் கொண்டே இரு...
இருக்கின்ற காலத்தை,
சிறப்பாக பயன்படுத்தினால்...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
31 👏👏👏👏👏👏👏👏👏
கட்டிக் கறக்கிற மாட்டைக் கட்டிக் கறக்க வேண்டும்,
கொட்டிக் கறக்கிற மாட்டைக்
கொட்டிக் கறக்க வேண்டும்.
கட்டிக் கிடந்தால்தான் உள் காய்ச்சல் தெரியும்.
கட்டிக் கொடுத்த சோறும், கற்றுக் கொடுத்த வார்த்தையும் ,
எவ்வளவு நாளைக்கு?
யாருக்கு என்ன இடம் என தீர்மானித்துக் கொள்...
போருக்கே சென்றாலும்,
நீயே போரிட்டால் தான்.....
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
32 👏👏👏👏👏👏👏👏
நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே.
அதற்காக நேர்மையைக் கை விட்டு விடாதே.
அந்த நேர்மையே உன்னைக் காப்பாற்றும்.
வாழ்வில் சின்னச் சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்படாதே.
சந்தோஷம் குறைவதற்கும் பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம்.
உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம் நீயும் உண்மையாய் இரு.
👏👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம்!
👏👏👏👏👏👏👏👏
உற்சகமான காலை வணக்கம்.🙏💐
*************************************
33 👏👏👏👏👏👏👏👏
நீங்கள் ஆசைப்படுவதெல்லாம் கிடைக்காமல் இருப்பது, உங்களை ஒரு சிறந்த வாழ்க்கைக்கு கொண்டு செல்வதற்காகவே இருக்கும்.
முடிந்தவரை உங்கள் வேலையை
சிறப்பாக செய்துவிடுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரம் தானாக கிடைக்கும்.
நேரத்தையும், வாய்ப்பையும் ஒருபோதும் வீணடிக்காதீர்கள். அந்தத் தவறுக்கு, எந்த காரியமும் பரிகாரமாகாது.
பொறுத்திருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் அதற்கான நன்மைகளை காலம் கடந்தாவது அழைத்துக் கொண்டு வரும்.
👏👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம்!
👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்.💐🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
34👏👏👏👏👏👏👏👏
அதிர்ஷ்டம் என்பது ஒருமுறை தான் வாழ்க்கை கதவை தட்டும்..
வாய்ப்பு என்பது சில நேரம் தான் நமக்கு வாய்க்கும்...
உழைப்பு என்றும் உறுதிபடுத்திக் கொண்டே தான் இருக்கும்....
உழைத்துக் கொண்டே இருங்கள்....
👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
Comments
Post a Comment