Posts

Showing posts from January, 2023

பால.ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை.( 1)

  😄     எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கதை ... 😍😻 ஒரு நாள் ஒரு பெண்மணி கோல்ப் விளையாட சென்றாள்.  அவள் அடித்த பந்து கோல்ப் கிரவுண்டு பொந்துக்குள் விழந்து விட்டது⛳.  அவள் அந்த பந்தை எடுக்க பொந்துக்குள் குனிந்தாள். அப்போது பந்தோடு ஒரு குட்டி தவளையும் 🐸 அதில் இருந்தது.  🐸 அந்த தவளை பெண்ணிடம் சொல்லியது "என்னை இந்த குழியில் இருந்து விடுவித்தால் உனக்கு 3⃣மூன்று வரங்கள் தருகிறேன்" என்றது.    அந்த பெண் தவளைக்கு குழியில் விடுதலை தந்தாள்.  மேலே வந்த அந்த🐸 தவளை சொன்னது  "அந்த வரத்தை தர ஒரு நிபந்தனை அதை சொல்ல மறந்து விட்டேன். உனக்கு நான் கொடுக்கும் வரம் உன் கணவருக்கும் பத்து மடங்கு அதிகமாக கிடைக்கும்" என்றது.    அந்த பெண் சொன்னாள் "அது பரவாயில்லை" என்றாள். 👸  அந்த பெண் முதல் வரத்தை கொண்டு நான் இவ்வுலகில மிக அழகிய பெண்ணாக வேண்டும் என கேட்டாள்.         அந்த 🐸 தவளை அவளை எச்சரித்தது. உன் கணவன் உன்னை விட அழகானவாக மாறி விடுவான் என்றது.☝  "அது பரவாயில்லை ஏன் எனில் அவருக்கு இணையான அழகு படைத்த என்னை மட்டுமே அவர் பார்ப்பார்" என அந்த பெண் சொன்னாள். ஆகவே முதல் வரம்

செயலிழந்த பேட்டரிக்கு ஒரே நாளில் புதிய பேட்டரி பெற்ற அனுபவம்

 🔵மிக எளிதாக ஏமாற்றப்படும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள்                                      நண்பர்களே சமீபத்தில் 9 மாதங்களுக்கு முன்பாக இரண்டு சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்கி இருந்தேன். ஆனால் சரியாக  9 மாதத்தில் சுத்தமாக பேட்டரி செயல்பட வில்லை. நான் தொடர்ந்து எனது டூவீலரை ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கிடம்   சரிபார்த்து கொடுக்குமாறு  கேட்டேன். எனக்கு மெக்கானிக் தானே பொறுப்பு எடுத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட கம்பெனி நன்றாக இருக்கும் என்று அந்த பேட்டரியை வாங்கி அவரே  மாற்றி கொடுத்து இருந்தார். அன்னாரிடம் சென்று கேட்டபோது  முன்பு நன்றாக இருந்த டிஸ்ட்ரிபியூட்டர், தற்பொழுது சரியான முறையில் பேட்டரியை மீண்டும் தருவதில்லை. ரீப்ளேஸ்  செய்து தருவதில்லை என்று கூறினார். குறைந்தது 25 நாட்களுக்கு மேல் ஆகிறது பேட்டரி மாற்றித் தருவதற்கு என்றும் தெரிவித்தார். நான் கேட்டேன் 25 நாட்கள் பேட்டரி இல்லை என்றால் ஸ்டேண்ட் பை பேட்டரி கொடுப்பீர்களா என்று கேட்டேன். அதுவும் அந்த கடைக்காரர் தர மாட்டேன் என்கிறார். முதலில் உங்களது பேட்டரியை செக் செய்வோம். பிறகு அதைப் பற்றி பேசிக் கொள்வோம் என்று கூறினார். நானும் மு

தன்னம்பிக்கை காலைப் பொழுது பொன்மொழிகள்

Image
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1.ஓடிக் கொண்டு இருக்கும் ஆறு, தன் பயணத்தில் இருந்து திரும்பி வருவதில்லை... வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு, மீண்டும் வில்லிடம்  திரும்பி வரப்போவதில்லை..‌ கல்லில் உருவான தெய்வம், கல்லாக மாறப் போவதில்லை.... உன் சொல்லில், உன் செயலில்,  மாற்றம் இல்லாமல் நீயும் செயல்பட்டுக் கொண்டே இரு.... 👏👏👏👏👏👏👏👏👏 வெற்றி நிச்சயம்! 👏👏👏👏👏👏👏👏👏 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 2.👏👏👏👏👏👏👏👏 உறவுகளை சரியாகப் பேணி உறவாடுவதும் ஓர் கலையே...!! பிரச்சினைகள் அற்ற உறவுகளும் இல்லை...!! இணங்க மறுக்கும் உறவுகளும் இல்லை...!! விட்டுக் கொடுத்து செல்பவர்கள் முட்டாள்களும் அல்ல...!! அடங்கிச் செல்பவர்கள் அடிமைகளும் இல்லை...!! உணர்ந்துக் கொண்டால் அனைத்தும் நலமே...!! 👏👏👏👏👏👏👏👏 வெற்றி நிச்சயம்.! 👏👏👏👏👏👏👏👏 உற்சாகமான காலை வணக்கம்.💐🙏 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 3.👏👏👏👏👏👏👏👏👏 குறை ஒன்றுமில்லை! குறை  ஒன்றுமில்லை!! என்று சொன்னால் மட்டும் நிறைவாகுமா?.. இருக்கின்ற குறைகளை, வருகின்ற குறைகளை, குறைக்க பழக வேண்டும்.. பிறை போல வளரும் குறைக

தலைநகரில் கால் பதிக்கும் TNPTF

Image
சென்னை மாநகராட்சி அமைப்புகிளையின் சார்பில் முதற்கட்டமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் உறுப்பினர்களாக இணைந்துள்ள 700 உறுப்பினர்களின் சந்தாத்தொகையில் மாநிலப் பங்கு தொகையைப் பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்களிடம் 26.12.22 அன்று சென்னை மாவட்ட அமைப்பாளர் கே.சத்தியநாதன் அவர்கள் வழங்கினார். விடுபட்ட பள்ளிகளில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் தொடரும் என்ற விபரத்தையும் மாநிலப் பொதுச்செயலரிடம் மாவட்ட அமைப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழவில்  இடம் பெற்றுள்ள தோழர் சு.முருகன் அவர்களும் கலந்து கொண்டார். 10 மண்டலங்கள் உள்ள சென்னை மாவட்டத்தில்5 மண்டலங்களுக்கான தேர் தல் நமது சங்கத்தின் அமைப்பு விதிகளின் அடிப்படையில் நடந்து, பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *தேர்தல் நடந்து முடிந்த மண்டலங்களின் பொறுப்பாளர்களின் விபரம் சென்னை மாநகராட்சி மாவட்டக் கிளை மண்டலம் (AEO2) வட்டாரத்தலைவர்- திருமதி எஸ். சலோமி, துணைத் தலைவர்கள்- திரு.ஜி. தண்டபாணி, திருமதி ஆர்.புவனேஸ்வரி, வட்டாரச் செயலாளர்-திருமதி கே. பிரேமா செல்வகுமார