76 வயது கணவரை கொரோனாவில் இருந்து மீட்க கூடவே தங்கி போராடிய மனைவி


கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயது கணவரை காப்பாற்ற பத்து நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து பணியாற்றிய அவரது மனைவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுதத செங்குன்றம் பகுதியை சேர்ந்த முதியவர் மதன கோபாலுக்கு நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் பக்கவாதம் மனநலம் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளன.இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய பட்டது.இதனையடுத்து அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


ஆனால் கணவருக்கு கொரோனா எனத் தெரிந்தும் 66 வயதான அவரது மனைவி லலிதா அவரைவிட்டு பிரியாமல் மருத்துவரின் அனுமதி பெற்று  கொரோனா வார்டிலேயே கணவருடன் 10 நாட்கள் இருந்து கவனித்து கொண்டார்.
மூதாட்டி லலிதாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லைஎன முடிவு வந்துள்ளது.

10 நாட்கள் சிகிச்சை முடிந்து முதியவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

வாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை

தன்னம்பிக்கை காலைப் பொழுது பொன்மொழிகள்