மீண்டும் ரூபாய் 37 ஆயிரத்தை தாண்டியது தங்கம்


சென்னையில் சனிக்கிழமை பவுன் ஆபரண தங்கம் மீண்டும் ரூபாய் 37 ஆயிரத்தை தாண்டியது பவுனுக்கு ரூபாய் 232 உயர்ந்து ரூபாய் 37 ஆயிரத்து 120க்கு விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் பத்தாம் தேதி ரூபாய் 35 ஆயிரத்தையும் ஜூன் 24 ஆம் தேதி ரூபாய் 37 ஆயிரத்துயும் தாண்டியது .அதன்பிறகு தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது .இந்நிலையில் சென்னையில் சனிக்கிழமை பவுன் ஆபரண தங்கம் மீண்டும் ரூபாய் 37 ஆயிரத்தை தாண்டியது பவுனுக்கு ரூபாய் 232 உயர்ந்து ரூபாய் 37 ஆயிரத்து 120 க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிராமுக்கு ரூபாய் 29 உயர்ந்து ரூபாய் 4640 ஆக இருந்தது அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 53 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 53 ஆயிரம் ஆகவும் இருந்தது சனிக்கிழமை விலை ரூபாயில்

ஒரு கிராம் தங்கம் ---4640
ஒரு பவுன் தங்கம்---- 37 ஆயிரத்து 120
ஒரு கிராம் வெள்ளி---- 53
ஒரு கிலோ வெள்ளி ---53000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜிஎஸ்டி தனி)

ஒரு கிராம் தங்கம்--- 4611
ஒரு பவுன் தங்கம்--- 36 ஆயிரத்து 888
ஒரு கிராம் வெள்ளி-- 53
ஒரு கிலோ வெள்ளி --53000.

Comments

Popular posts from this blog

வாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை

தன்னம்பிக்கை காலைப் பொழுது பொன்மொழிகள்